click me

Monday, November 26, 2012

துபாயில் விரைவில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்

உலகின் மிகப்பெரிய ஷாப்பிங்மாலையும், லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட பெரிய பூங்காவையும் கட்டப்போவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.
துபாய் நகரில் முகமது பின் ராஷித் என்ற சிட்டியை உருவாக்க இருக்கின்றனர். இங்கு பல்வேறு குடியிருப்புகளும், உலகின் மிகப்பெரிய ஷாப்பிங்மாலையும் கட்டவுள்ளனர்.
இது தவிர லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட 30 சதவீதம் பெரிய பூங்காவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாலுக்கு ஆண்டுக்கு 80 மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உள்ள மால்கள், ஹோட்டல்களுக்கு இந்த ஆண்டு 62 மில்லியன் மக்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment