நவ 23: பரங்கிப்பேட்டை அருகேயுள்ள பி.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே "ரப்பானியா சூப்பர் மார்க்கெட்" உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு அதன் உரிமையாளர் சபிருல்லாஹ் மற்றும் ஊழியர்கள் வீட்டிற்குச் சென்றனர்.
நள்ளிரவு 12 மணியளவில் கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூபாய்.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள், அழுகு சாதனைப் பொருட்கள், அரிசி மூட்டைகள், காலணிகள் மற்றும் அலமாரிகள் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலானது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்துயிருக்கலாம் என்ற கோணத்தில் பரங்கிப்பேட்டை பேலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
thanks:tntjpno
No comments:
Post a Comment