மலேசியாவில் M .R.ராதா சினிமா,அரசியல்,சமுதாயம் என அவர் கலந்து கட்டி கலாய்த்து இருப்பதை கேளுங்கள்..
M .R.ராதா என்றவுடன் நம் நினைவுகளில் நிழலாடுவது அவரது தைரியமும் யார்க்கும் அஞ்சாத எகத்தாளம் மிக்க பேச்சும் தான்.தனக்கே உண்டான தனித்துவ பாணியில் சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை பிற்போக்குத்தனங்களை அசால்டாக சொல்லிப்போகும் அவரது ஸ்டைல் அவருக்கு மட்டுமே உரியது.பல படங்களில் தன் பாணியில் பட்டையை கிளப்பி உள்ள M .R.ராதா வின் ரத்தக்கண்ணீரை யாராலும் மறந்து விட முடியாது.சமுதாயத்துக்கு சாட்டையடி கொடுத்த அது போன்றோர் இன்னோர் படத்தை யாராலும் எடுத்துவிடவும் முடியாது.அப்படியே எடுத்தாலும் அவரைப்போல நடிக்க இனி ஆளேது. அப்படிப்பட்ட M .R.ராதா சினிமா,நாடகம் மட்டுமில்லாமல் பொது மேடைகளிலும் முற்போக்கு கருத்துகளை விதைத்தார் என்பது யாவரும் அறிந்ததுதான்.பெரியாரின் தீவிரத் தொண்டனான M .R.ராதா சிந்தனைகளில் பிற்போக்குதனமிகுந்த சிறியோர்களை திட்டி முற்போக்கு எண்ணங்களை விதைப்பதை தன் கடமையாக கொண்டிருந்தார்.பாருங்கள் தன் பணியை மலேசியாவிலும் தொடர்ந்திருக்கிறார். சினிமா,அரசியல்,சமுதாயம் என அவர் கலந்து கட்டி கலாய்த்து இருப்பதை கேளுங்கள்..
No comments:
Post a Comment