சான்டி புயலின் பாதிப்பிலிருந்து மீளாத நியூயார்க்கை ஏதேனா புயல் தாக்கியுள்ளது.
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மையம் கொண்டிருந்த சான்டி புயல் அமெரிக்காவை தாக்கியதில், 13 அடி உயரத்திற்கும் மேற்பட்ட அலைகள் எழும்பி நகரங்களுக்குள் புகுந்தன.
இதனால் நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளத்தின் மிதந்தன. இந்த பாதிப்பில் இருந்த இன்னும் மீளாத நியூயார்க், நியூஜெர்சியை தற்போது ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது.
இந்த புயலால் கனமழை, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் பலத்த காற்றும் வீசுகிறது.
இந்த புயலால் கனமழை, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் பலத்த காற்றும் வீசுகிறது.
ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன. இந்த புயலின் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும், நியூ இங்கிலாந்து பகுதியில் 6 முதல் 10 இன்ச் அளவுக்கு பனிபொழியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நியூயார்க், நியூஜெர்ஸி, கனக்டிகட், பென்சில்வேனியா மற்றும் மசாசுசட்ஸில் மழை மற்றும் பனி பொழிவால் 1,710 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



No comments:
Post a Comment