ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக சுமார் 100,000 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். |
நீலம் புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் கரையோரத்திலுள்ள 6 மாவட்டங்களில் இரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அண்மையில் பெய்த மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்வடைந்துள்ளதுடன், சுமார் 1,500 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் வெள்ளத்தால் தத்தளித்துக்கொண்டிருந்த சுமார் 2,000 பேருக்கு மீட்புப் பணியாளர்கள் உதவியளித்துள்ளனர். ![]() ![]() ![]() ![]() ![]() |

No comments:
Post a Comment