click me

Wednesday, November 21, 2012

புவனகிரி மற்றும் 3 தொகுதியில் போட்டியிட்ட விவகாரம்: ஜெ. மீதான வழக்கை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்

 supreme court quashes criminal proceedings against jaya டெல்லி: கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது              .கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது என்ற விதியை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை கண்டித்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எல். தத்து மற்றும் சி.கே. பிரசாத் கூறுகையில்,
மாநிலத்தில் உயரிய பதவியில் இருந்துள்ளீர்கள். ஆளுநருக்கு அடுத்த படியான பதவியை வகித்துள்ளீர்கள். ஒரு கட்சியை நடித்துகிறீர்கள். அப்படி இருக்கையில் எப்படி இவ்வாறு செய்யலாம்? என்று கேட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment