click me

Monday, November 26, 2012

பனேசர் அபாரம்:இங்கிலாந்து பந்துவீச்சில் சுருண்ட இந்தியா

மும்பை டெஸ்டில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சுருண்ட இந்திய அணி தோல்வியை நோக்கி செல்கிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றன. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ஓட்டங்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு அணித்தலைவர் அலஸ்டயர் குக், பீட்டர்சன் நல்ல தொடக்கம் கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குக் டெஸ்ட் அரங்கில் 22வது சதம் கடந்தார்.
இவர் 122 ஓட்டங்கள் எடுத்த போது அஷ்வின் சுழலில் சிக்கினார். எதிர் முனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பீட்டர்சன் 186 ஓட்டங்களில் ஓஜா பந்தில் வெளியேறினார்.
பின்பு வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 413 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 86 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணிக்கு ஓஜா 5 விக்கெட்டும், அஷ்வின், ஹர்பஜன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
பின்பு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷேவாக் 9 ஓட்டங்களிலும், அடுத்து களமிறங்கிய புஜாரா 6 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய சச்சின்(8), கோஹ்லி(7), தோனி (6), யுவராஜ்(8) ஏமாற்றினர். இன்றைய மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது. கம்பீர் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு பனேசர் 5 விக்கெட் கைப்பற்றினார். தற்போது 31 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
எனவே இங்கிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்புகள் உறுதியாக உள்ளது.

No comments:

Post a Comment