
பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர்கள் கனகசபை (வயது 48), முத்தையன் (50), கண்ணன் (31), மீனவர்கள். நேற்று மாலையில் இவர்கள் 3 பேரும் முத்தையனின் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலுக்குள் சென்றபோது ராட்சத அலை எழுந்தது.
இதனால் கடலில் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 3 மீனவர்களும் நீரில் மூழ்கினர். உடனே முத்தையனும், கண்ணனும் நீச்சலடித்து கரையை அடைந்தனர். நீண்டதூரம் நீந்தியதால் கரையிலேயே மயங்கி விழுந்து விட்டனர்.
2 பேரையும் அந்த பகுதி மீனவர்கள் மீட்டனர். கனகசபையின் கதி தெரியாமல் அவரது குடும்பத்தினரும், பிற மீனவர்களும் கலங்கினார்கள். கடலில் மூழ்கி இறந்த கனகசபையின் உடல் இன்று அதிகாலையில் கரை ஒதுங்கியது. அவரது உடலை கண்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
பரங்கிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று கனகசபை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலிமுல்லா ஷா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நன்றி : my pno
நன்றி : my pno
No comments:
Post a Comment