click me

Tuesday, November 6, 2012

சவுதி அரசர் அப்துல்லாவை பிரான்ஸ் ஜனாதிபதி சந்தித்தார்

சிரியாவின் உள்நாட்டு போர் மற்றும் ஈரானின் அணு சக்தி பிரச்னை குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே சவுதி அரசரை சந்தித்து பேசினார்.
பிரான்சின் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே முதன் முறையாக எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவுக்கு நேற்று முன்தினம் வருகை புரிந்தார்.
இங்கு அரசர் அப்துல்லாவை சந்தித்து, ஈரானின் அணு சக்தி பிரச்னை மற்றும் சிரியா உள்நாட்டு போர் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதற்கிடையே ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும், தன்னுடைய அணு சக்தி ஆராய்ச்சியில் சற்றும் பின்வாங்கவில்லை.
எனவே சவுதி அரேபியாவிடம் ஈரான் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, ஆதரவை பெற பிரான்ஸ் முயல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment