பொதுவாக பொருளாதார ரீதியாகவும் கல்வியிலும் சமூக அந்தஸ்த்திலும் கீழ் நிலையில் இருக்கும் அப்பாவி மக்களே

மிகச்சாதாரணமாக இரு வீட்டாரும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரச்னையை ஒரு சேனலில் பதிவு செய்து ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் அதை இணையத்திலும் ஏற்றுகிறார்கள். இன்று விவரம் தெரியாமல் டிவியில் வாக்குமூலம் கொடுத்தவர்களின் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் இதை காண நேர்ந்தால் எவ்வளவு அவமானத்திற்குள்ளாகும். பேசினால் தீர்த்துவிடக்கூடிய பிரச்னையை டிவியில் ஒளிபரப்பி பின் எப்போதும் அந்த குடும்பம் ஒன்று சேரவே முடியாதபடி செய்துவிடுகிறார்கள்.
இன்னும் பச்சையாக சொன்னால் இவர்களின் செயல் கூட்டிக் கொடுப்பதை விட கேவலமானது
ஏன் 'அவன் பொண்டாட்டிய இவன் கரெக்ட் பண்றது.. இவ புருசனை அவ கரெக்ட் பண்றது' போன்ற சம்பவங்கள் எல்லாம் பிரபலமான நடிகர்கள் நடிகைகள் தொழிலதிபர்கள் வீட்டில் நடப்பதில்லையா என்ன.. திறமையிருந்தால் அப்படிப்பட்ட பிரபலங்கள் அல்லது பணக்காரர்களின் ஒரு குடும்பத்தை கூட்டி வந்து இப்படி சந்தி சிரிக்க வைக்க முடியுமா..?
No comments:
Post a Comment