click me

Tuesday, November 27, 2012

தீ விபத்து: துணை ஆட்சியர், மற்றும் செல்வி ராமஜெயம் நேரில் ஆய்வு!

பரங்கிப்பேட்டை: ஜெயின் பாவா தர்கா வளாகத்தில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த திடீர் தீவிபத்தில் மிட்டாய் நானா வீடு என்று அறியப்படும் ஒரு குடிசை வீட்டின் முக்கிய ஆவனங்கள், ரொக்கப் பணம், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தீக்கிரையாயின. தீவிபத்தினால் ஏற்பட்ட சேதத்தினை நேற்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பார்வையிட்டனர்.
இதனையடுத்து இன்று துணை ஆட்சியர் சுப்ரமணியன் மற்றும் முன்னாள் அமைச்சரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான செல்விராமஜெயம் நேரில் ஆய்வு செய்து பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் எஸ். நூர் முஹம்மதுவிடம் சேதவிபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். பிறகு, துணை ஆட்சியர் மற்றும் செல்வி ராமஜெயம் தலா ரூபாய் 5 ஆயிரத்தினை தீவிபத்தினால் இழப்புக்கு ஆளான மும்தாஜ் கலிமா என்பவரிடம் வழங்கினர். அப்போது, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, ஜமாஅத் நிர்வாகிகள், 1-வது வார்டு கவுன்சிலர் யூ. ஹபிபுர் ரஹ்மான், 11-வது வார்டு கவுன்சிலர் இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 1-வது வார்டு கவுன்சிலர் ஹபிபுர் ரஹ்மான் சகோதரர் யூ. ஹுசைனுல் ஆபிதீன் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனுஸ் முன்னிலையில்  ரூபாயிரம் 5 ஆயிரம் வழங்கினார்.


No comments:

Post a Comment