click me

Tuesday, November 6, 2012

பண்ருட்டி அருகே குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.2 கோடி முந்திரிபருப்பு நாசம்

பண்ருட்டி அருகே குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.2 கோடி முந்திரிபருப்பு நாசம்பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலிரில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் ஒரு பகுதியில் ஒரு முந்திரி நிறுவனத்தின் சார்பில் 3 ஆயிரத்து 200 முந்திரி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு பகுதியில் உள்ள அறையில் 2 கன்டெய்னர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட மரச்சாமான்களை இறக்கு வதற்காக இன்று அதிகாலை 3 மணிக்கு  தொழிலாளர்கள் வந்தனர்.

அப்போது மின்சாரம் இல்லாததால் மெழுகு வர்த்தியை இந்த அறையில் ஏற்றி வைத்து மரச்சாமான்களை இறக்கினார்கள். பின்னர் அந்த மெழுகு வர்த்தியை அணைக்காமல் கதவை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த மெழுகுவர்த்தி கீழே சாய்ந்ததால் மரச்சாமான்கள் மீது தீ பற்றியது. 


அந்த தீ  சிறிது நேரத்தில் குடோனில் மற்றொரு பகுதியில் இருந்த முந்திரி மூட்டைகள் மீதும் பரவியது. இதனால் அறையில் இருந்து புகை வெளியேறியது. இதைப்பார்த்த காவலாளி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தீயணைக்கும் படைக்கு தகவல் தெரிவித்தார். பண்ருட்டி மற்றும் முத்தாண்டிக்குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 

குடோன் தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமாக இருந்தது. முன்பக்க கதவை திறந்து உள்ளே செல்ல முடியவில்லை. எனவே 2 பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குடோனின் ஒரு பகுதி சுவரை தீயணைப்பு படையினர் உடைத்தனர். இதன் வழியாக உள்ளே சென்று குடோனுக்குள் எரிந்த தீயை  6 மணி நேரம் போராடி அணைத்தனர். 

இந்த தீவிபத்தினால் குடோனில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள முந்திரி மூட்டைகள் மற்றும் மரச்சாமான்கள் எரிந்து சேதம் அடைந்தன. வெப்பம் தாங்காமல் இரும்பு கம்பிகள் உருகின. காடாம்புலிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment