புதுடெல்லி, நவ 4-

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்தனர். மக்களின் அதிருப்தியை சமாளிக்க சில மாநில அரசுகள் மானிய விலையில் கூடுதல் சிலிண்டர்கள் வழங்கப்டும் என்று அறிவித்தன.
இது ஒருபுறம் இருக்க, சிலிண்டர்கள் சப்ளை செய்வதில் ஏஜென்சிகள் தேவயில்லாமல் தாமதம் செய்வதாக ஏற்கனவே புகார்கள் இருந்து வருகின்றன.
இதுதொடர்பாக எண்ணை நிறுவனங்களுக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. தவிர, தற்போது, வீடு தோறும் சிலிண்டர்கள் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
ஆய்வு செய்ய வரும் அகாரிகளிடமும் நுகர்வோர்கள் புகார்கள் கூறுகின்றனர். சமையல் கியாஸ் சிலிண்டர் பெற புக்கிங் பண்ணி ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
நுகர்வோரின் அதிருப்தியை போக்க, பெட்ரோலிய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறியை வகுக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழிகாட்டு நெறியில் புதிய விதிகள் சேர்க்கப்பட உள்ளன. அதாவது, புக்கிங் செய்த 48 மணி நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டரை சப்ளை செய்ய வேண்டும்.
இல்லையெனில் சம்பந்தப்பட்ட கியாஸ் ஏஜென்சிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மேற்கண்ட அம்சங்கள் புதிய வழிகாட்டு நெறியில் சேர்க்கப்பட உள்ளன.
இதுபற்றி, பெட்ரோலிய அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
புதிய வழிகாட்டு நெறி, சிவப்பு நாடா முறையை ஒழிக்க உதவும். கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்வதில் ஏஜென்சிகள் தாமதம் செய்வதாக பல்வேறு தரப்பில் இருந்தும் ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
சேவையை மேம்படுத்துவதற்காகவும், நுகர் வோர்களின் உரிமையை நிலைநாட்டவும், புதிய வழிகாட்டு நெறிகள் வகுக்கப்படுகிறது.
இது நூகர்வோருக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் புக்கிங் செய்த 2 நாளில் சமையல் கியாஸ் சிலிண்டர் நூகர்வோருக்கு கிடைக்கும்.
தவறும் ஏஜென்சிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வேறொருவர் பெயருக்கு மாற்றிக் கொள்ளும் நடைமுறையும் எளிமைப்படுத்தப்படும்.
No comments:
Post a Comment