ஜாமிஆ மஸ்ஜித் புதுப்பள்ளியை விரிவாக்கம் – புதுப்பிக்கும் பணி தொடர்பாகஆலோசனைக்கூட்டம் இன்று காலை பத்து மணி அளவில் முத்தவல்லி, H. J.பஷீர் அஹமது தலைமையில் நடைப்பெற்றது. பரங்கிப்பேட்டை பேரூராட்சிமன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தலைவர் டாக்டர் S. நூர் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றஇக்கூட்டத்தில் ஜமாஅத் நிர்வாகிகள், அனைத்து பள்ளி நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் கலந்துக்கொண்டார்கள். சுமார் 45 நிமிடம் நடைபெற்றஇக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை புதுப்பள்ளியின்வளர்ச்சிக்காக வழங்கினார்கள்
இக்கூட்டத்தில் பள்ளி கட்டுமானப்பணிக்காக எட்டு பேர் கொண்ட கமிட்டிஅமைக்கப்பட்டது.
தலைவர்: M.S.முஹம்மது யூனுஸ்
துணைத் தலைவர்: I.இஸ்மாயில் மரைக்காயர் (ஆசிரியர்-ஓய்வு)
துணைத் தலைவர்: H.முஹம்மது மக்தூம்
செயலாளர்: U.ஹீசைனுல் ஆபீதீன்
துணைச் செயலாளர்கள் : M.கவுஸ் ஹமீது (ராஜா)
S.O.செய்யது ஆரீப்
U.ஹபீபுர் ரஹ்மான்
பொருளாளர்; H.முஹம்மது அலி மரைக்காயர்.(பெரியதம்பி)
மார்க்க ஆலோசகர்; M.S.காஜா முஹையத்தீன் மிஸ்பாஹி




நன்றி:mypno
No comments:
Post a Comment