click me

Saturday, November 3, 2012

பலத்த எதிர்பார்ப்​புக்களுக்கு மத்தியில் அறிமுகமாகி​யது iPad mini

கணனி உலகில் புரட்சியை ஏற்படுத்திய அப்பிள் நிறுவனமானது தனது iPad உற்பத்தியில் iPad mini எனும் நான்காம் சந்ததி Tablet - இனை பலர்த்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னைய iPad சாதனங்களை விடவும் பருமனில் சிறியதாக காணப்படும் இவற்றின் அகலமானது 5.3 அங்குலங்களாகவும், நீளமானது 7.87 அங்குலங்களாகவும் காணப்படுகின்றது. மேலும் இவற்றின் தடிப்பானது 7.2 மில்லி மீட்டர்காளகவும் அமைந்துள்ளது.
அப்பிள் இறுதியாக அறிமுகப்படுத்திய iOS 6 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த iPad mini, 768 x 1024 Pixels Resolution உடையதும் 7.9 அங்குல அளவுடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளன.
இவை தவிர 2G,3G, மற்றும் 4G வலையமைப்பு தொழில்நுட்பங்களில் செயற்படவல்லவை. மேலும் Dual-core 1 GHz Cortex-A9 Processor, 512 MB RAM, 5 Mexapixels உடைய பிரதான கமெரா மற்றும் 1.2 Mexapixels கொண்ட துணைக் கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளன.
16GB, 32GB மற்றும் 64GB ஆகிய சேமிப்பு கொள்ளளவுகளைக் கொண்டதாகக் கிடைக்கும் இவற்றின் பெறுமதியானது முறையே 269, 349, 429 அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment