click me

Tuesday, November 6, 2012

தென்னாப்பிரிக்க பணத்தில் தேசத் தலைவர் நெல்சன்மண்டேலாவின் முகம்


மண்டேலா படம் அச்சிடப்பட்ட பணத்தாள் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக தேசத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் முகம் அச்சிடப்பட்ட ராண்ட் நோட்டுக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்நாட்டின் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பிரிடோரியாவில் உள்ள ஒரு சிறிய கடைக்குச் சென்று புதிய நோட்டுக்களை கொடுத்து அதன் மூலம் சில பொருட்களை வாங்கிச் சென்றார்.
இந்த புதிய நோட்டுகள் மண்டேலாவிடம் காட்டப்பட்டதாகவும், அதைப் பார்த்து அவர் மகிழ்ந்ததாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
முந்தைய காலங்களில் தெருக்களுக்கும், நகரங்களுக்கும் தன் பெயர் சூட்டப்படுவது குறித்து மண்டேலா ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
அவரது அறக்கட்டளையும்கூட மண்டேலாவின் பெயர் பயன்படுத்தப்படுவது குறித்து மிகவும் கவனமாக இருந்து வருகிறது.
அதேநேரம் உலகின் பல பகுதிகளில் அந்நாட்டின் தேசத் தலைவர்களின் படம் பண நோட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment