click me

Wednesday, November 28, 2012

தெரிவுக்குழுவுடன் சச்சின் சந்திப்பு: ஓய்வு பெற தயார்?

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்பேன் சச்சின் டெண்டுல்கர் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
39 வயதான டெண்டுல்கர் கிரிக்கெட்டின் சதசாதனை உட்பட பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். தனது 23 ஆண்டு கால தொடர் பயணத்தில் அவர் அனைத்து சாதனைகளையும் படைத்துள்ளார்.
இந்த ஆண்டில் அவரது ஆட்டம் மோசமாகவே உள்ளது. நியூசிலாந்து மற்றும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் அவரால் சிறப்பாக ஆட முடியவில்லை. ஓட்டங்கள் எடுக்க மிகவும் திணறுகிறார்.
துடுப்பாட்ட நுணுக்கம் அனைத்தையும் பயன்படுத்துவதில் வல்லவரான அவர் சமீப காலங்களில் அதிகமாகவே போல்டு ஆகி விடுகிறார்.

கடைசியாக அவர் 2011 ஜனவரி மாதம் தென் ஆப்ரிக்காவுக்கெதிரான கேப்டவுன் டெஸ்டில் சதம் அடித்தார். அதன்பின்பு டெண்டுல்கர் 15 டெஸ்ட் ஆடிவிட்டார். ஆனால் சதம் அடிக்கவில்லை. இந்த ஆண்டில் 12 இன்னிங்சில் 274 ஓட்டங்களே எடுத்துள்ளார். சராசரி 22.83 ஆகும்.
டெண்டுல்கர் தனது நிலை குறித்து தெரிவு குழுவினரிடம் வெளிப்படையாக பேச வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர்களான கபில்தேவ், கவாஸ்கர் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் தெரிவு குழு தலைவர் சந்தீப்பட்டீலை டெண்டுல்கர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது டெண்டுல்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.
தான் ஓய்வு பெற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னால் ஓட்டங்களை எடுக்க முடியவில்லை என்றும், தான் ஓய்வு பெற விரும்புவதாகவும், இனி தெரிவு குழுவினர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சந்தீப்பாட்டீலிம் டெண்டுல்கர் தெரிவித்து இருக்கிறார். இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
டெண்டுல்கர் 192 டெஸ்டில் விளையாடி 15,562 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 54.60 ஆகும். 51 சதமும், 65 அரை சதமும் அடித்துள்ளார்.
அதிகபட்சமாக 248 ஓட்டங்கள் டுத்துள்ளார். 200 டெஸ்டை தொடர அவருக்கு இன்றும் 8 டெஸ்ட் தேவை. அடுத்த ஆண்டு ஏப்ரல் 24ம் திகதி டெண்டுல்கர் 40 வயதை தொடுகிறார்.

No comments:

Post a Comment