click me

Tuesday, November 6, 2012

சென்னையில் ஒரு லாரி மணல் விலை ரூ.60 ஆயிரமாக உயர்வு:


சென்னையில் ஒரு லாரி மணல் விலை ரூ.60 ஆயிரமாக உயர்வு: 4 மாதத்தில் 2 மடங்கானதுசென்னை, நவ.6-
 
தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகள் மூடிக்கிடப்பதால் மணல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு யூனிட் மணல் (பெரிய லாரியில் எடுத்து வருவது) விலை ரூ.60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் மற்ற இடங்களில் குறிப்பாக தென்மாவட்டங்களில் ரூ.50 ஆயிரமாக மணல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக மணல் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் முனிரத்தினம் கூறியதாவது:-
 
கோர்ட்டு உத்தரவு, கிராமப்புற மக்கள் எதிர்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் 81 சதவீத மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே மணல் விலை உயர்ந்துள்ளது.
 
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டுமான தொழிலுக்கு ஒரு நாளைக்கு 6 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு லோடு மணல் எடுத்துவர 10 நாட்கள் வரை ஆகிறது.
 
சென்னையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் மணல் விலை ரூ.30 ஆயிரமாகத்தான் இருந்தது. மணல் குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும்.
 
இதுதொடர்பாக தமிழக முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மனுக்களையும் அனுப்பியுள்ளோம். மணல் குவாரிகள் விரைவாக திறக்கப்பட்டால்தான் மணல் விலை குறையும். 45 ஆயிரம் மணல் குவாரி லாரி உரிமையாளர்களின் குடும்பத்தினரும் காப்பாற்றப்படுவார்கள்.
 

No comments:

Post a Comment