click me

Wednesday, November 21, 2012

காசாவில் போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புதல்


இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும், காசாவில் ஜிம்டி நேரப்படி புதன் கிழமை இரவு 7 மணிக்கு அமலுக்கு வரக்கூடிய ஒரு போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டிருக்கின்றன.
இது குறித்த அறிவிப்பு ஒன்றை, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில், கெய்ரோவில், எகிப்திய வெளியுறவு அமைச்சர், மொஹமத் கமெல் அம்ர் வெளியிட்டார்.
இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் கூறுகிறது.
போர் நிறுத்தத்துக்கு ஒரு வாய்ப்பு தர தான் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெடன்யாகூ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நிறுத்தும் ஒரு முயற்சியில், காசா நிலப்பரப்பு மீது இஸ்ரேல் கடந்த எட்டு நாட்களாக குண்டுமழை பொழிந்த நிலையில் இந்தப் போர் நிறுத்தம் வருகிறது.

No comments:

Post a Comment