click me

Sunday, November 18, 2012

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதனால் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தினால் நீலம் புயல் உருவானது.
இப்புயலினால் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் சேதங்கள் அதிகமானது.
இந்நிலையில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment