 பக்ரைனில் மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதை கண்டித்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன.
தலைநகர் மனாமாவில் ஐந்து இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் முருகைய்யா என்ற தமிழர் கொல்லப்பட்டார்.
மற்றொரு இந்தியருக்கு குண்டு வெடிப்பில், உள்ளங்கை துண்டிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரும் குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளார்.
மேலும் பக்ரைன் நாட்டுக்கான இந்தியத் தூதர் மோகன்குமார், முருகைய்யா பலியானதை உறுதி செய்துள்ளார்.
பக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 30) இவர் பக்ரைன் நாட்டில் மனமா என்ற பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது சகோதரர் சேகர். இவரும் பக்ரைன் நாட்டில் டிரைவராக பணி புரிகிறார். இவர்கள் மனமா என்ற பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
நேற்று திருநாவுக்கரசு தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே நிறுத்தி இருந்த காரை எடுக்க முயன்றார். அப்போது அதன் அருகே கிடந்த பாலிதீன் பையை காலால் உதைத்தார். அதில் குண்டு இருந்தது. அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் திருநாவுக்கரசு அதே இடத்தில் பலியானார்.
இதுகுறித்து அவரது சகோதரர் சேகர் அய்யம் பேட்டையில் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தார். பக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் உறவினர்கள் மூலம் திருநாவுக்கரசு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருநாவுக்கரசு உடல் நாளை (புதன்கிழமை) அய்யம்பேட்டைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.
|
No comments:
Post a Comment