கடலில் காற்று பலமாக வீசியதால் பரங்கிப்பேட்டை பகுதி கடற்கரையோர மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் நேற்று வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதி வெறிச்சோடியது.
பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து, வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதியில் விற்பனை செய்கின்றனர். உயர் ரக மீன் வகைகள், இறால், நண்டு உள்ளிட்டவைகள் பெரும்பாலும் அன்னங்கோவிலில் இருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதால் வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதியில் எப்போதும் கனரக வாகனங்கள் வந்து செல்வதும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும்.













































