click me

Showing posts with label மருத்துவ உலகம். Show all posts
Showing posts with label மருத்துவ உலகம். Show all posts

Thursday, December 6, 2012

0-12 மாதம் குழந்தைக்கு எந்த அளவு சாப்பாடு கொடுக்கணும் தெரியுமா?

குழந்தைக்கு எந்த அளவு சாப்பா��பிரசவம் முடிந்துவிட்டால், நிம்மதி அடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு
பராமரிப்பது. ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

Thursday, November 22, 2012

பக்கவாதம் அறிகுறிகளும், ஆபத்தும்..!

உலகிலே மிக அதிக அளவு மக்களை ஊனமாக்குவது..! வருடத்திற்கு ஆறு கோடி மக்களை உலகம் முழுக்க படுக்கையில் தள்ளி, முடக்கிப் போடுவது..! வருடத்திற்கு
பக்கவாதம் அறிகுறிகளும்,ஒன்றரை கோடி மக்களை உலகம் முழுக்க பலிவாங்கிக் கொண்டிருப்பது..! எந்த நோய் தெரியுமா? ப்ரெயின் அட்டாக் எனப்படும் பக்கவாத நோய்!! 

உலகம் முழுக்க 6 வினாடிக்கு ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதால், இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிக மிக அவசியம். நடை பயிலும் குழந்தை முதல், நடக்க தள்ளாடும் தாத்தா வரை யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கலாம். 

மின்னல்போல் திடீரென்று இந்த நோய் மனித மூளையை தாக்குவதால் ப்ரெயின் அட்டாக் என்கிறோம். பக்கவாதம் நரம்பியல் சார்ந்த நோய். நரம்புகள் மூளையிலும், தண்டுவடத்திலும் ஆரம்பித்து தசைகளை இயக்குகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்தாலோ, அந்த ரத்தக் குழாய்கள் வெடித்தாலோ ப்ரெயின் அட்டாக் ஏற்படும். 

Tuesday, November 20, 2012

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

கிரீன் டீ குடிப்பதனால்
கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். 

கிரீன் டீயின் நன்மைகள்........ 

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. 

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. 

Sunday, November 18, 2012

பேரிக்காயின் மருத்துவ குணங்கள்!

பேரிக்காயின் மருத்துவபேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது உண்மையிலேயே பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.


வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. 

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின், படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள். 

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து. 

Saturday, November 17, 2012

பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்

பீட்ரூட்டின் மருத்துவ• பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.



• பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். 

• பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். 

• கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். 

• பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். 

• பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். 

Saturday, October 27, 2012

அதிகளவில் பெண்களை தாக்கும் மார்பக புற்று நோய்

பெண்களை அதிகளவில் தாக்கும்இந்தியாவை பொறுத்த வரையில் கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக மார்பக புற்று நோய் பெண்களை அதிக அளவில் தாக்குகிறது. அமெரிக்க உணவு பழக்க

வழக்கங்கள் இந்தியாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருவதால் அமெரிக்காவை போல் இங்கும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் புற்றுநோய் தாக்கம் அதிகமாகும் என கண்டறியப்பட்டுள்ளது. 

பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி, வலி, தடித்திருத்தல், காம்பில் கசிவு அல்லது மார்பக அளவில் மாற்றங்கள் இதில் ஏதாவது இருந்தால் புற்றுநோய் தாக்கப்பட்டு இருக்கிறது என உணரலாம். 40 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் வருடம் ஒரு முறை அல்லது 2 வருடத்திற்கு ஒருமுறையாவது மெமோ கிராம் சோதனை செய்து கொள்ள வேண்டும். 

மார்பகத்தை எக்ஸ்ரே படம் எடுக்கும் சோதனையே இந்த மெமோ கிராம் சோதனையாகும். குறிப்பாக இந்த நோய் குடும்பத்தில் தாய், மகன், சகோதரி யாருக்கேனும் தாக்கி இருந்தால் முதல் குழந்தை 30 வயதுக்கு மேல் கருத்தரித்தாலோ, 11 வயதுக்கு முன்பு மாத விலக்கு ஏற்பட்டாலோ, 55 வயதுக்கு மேல் மாதவிலக்கு நிற்காமல் இருந்தாலோ, குழந்தை இல்லாமல் இருந்தாலோ, ஹார்மோன் மாத்திரைகள் அதிக நாட்கள் உட்கொண்டாலோ, கொழுப்பு சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை அதிகம் சாப்பிட்டாலோ மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு. 

Sunday, September 9, 2012

பிரிட்டன் மருத்துவத் துறையில் செல்வாக்குமிக்க 4 இந்திய டாக்டர்கள்

பிரிட்டன் மருத்துவத் துறையில் செல்வாக்குடன் திகழ்ந்து வரும் 50 பேர் கொண்ட பட்டியலை “பல்ஸ்” நாளிதழ் வெளியிட்டு வருகிறது.
நான்காவது ஆண்டாக, இந்நாளிதழ் நேற்று வெளியிட்ட பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நான்கு பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
கம்லேஷ் குந்தி, சாந்த் நாக்பால், கைலாஷ் சந்த், கிருஷ்ணா காசரனேனி ஆகிய இந்தியர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் கம்லேஷ் குந்தி லெஸெஸ்டர் நகரில் வசித்து வருகிறார். 1984ல், டுண்டீ பல்கலைக் கழகத்தில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர்.
நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில், நிபுணத்துவம் பெற்ற இவர், பிரிட்டனில் நீரிழிவு நோய்க்கான எண்ணற்ற விழிப்புணர்வு திட்டங்களில் ஆற்றிய பணிகள் எல்லாராலும் பாராட்டப்பட்டவை.
லண்டன் பல்கலைக்கழகத்தில் 1985ல் பட்டம் பெற்ற நாக்பால் ஹாரோ நகரில் வசிக்கிறார்.
1974ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற கைலாஷ் சந்த் தற்போது லங்காஷையர் நகரில் புகழ் பெற்ற டொக்டராக பணியாற்றி வருகிறார்.
கிருஷ்ணா, லெஸெஸ்டர் பல்கலைக் கழகத்தில் 2005ல் பட்டம் பெற்றவர்.

Saturday, August 25, 2012

கருந்துளசியின் மருத்துவ குணங்கள்

சளி, காய்ச்சல், அலர்ஜி போன்றவைகளை நீக்கும் ஆயுர்வேத நிவாரணி துளசி. இதனால்தான் பண்டைய காலங்களில் இருந்து இன்றைக்கும் வீடுகளில் துளசிமாடம் வைத்து வணங்கி வருகின்றனர்.
மலைக்காலம் வந்தாலே சளித் தொந்தரவுகளும், தண்ணீர் அலர்ஜியும் அதிகம் ஏற்படும். இதற்கு மருத்துவமனைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைப்பதில்லை.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சளித்தொல்லையானது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும்.
பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு சில நேரங்களில் கட்டுப்படாது.
நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காகவே சளியானது இயற்கையாக உடலில் சுரக்கிறது. இது அளவிற்கு மீறி பெருகும் போது அதனை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

Thursday, August 23, 2012

கேன்சரைப்பற்றிய 100 கேள்விகளும் அதற்கான விடைகளும்

இன்றைய காலகட்டத்தில் முக்கியமான நோய் என்றால் அதைகேன்சர் என்று சொல்கின்றோம். கேன்சர் வந்தால் அவ்வளவுதான-அவர் ஆயுள் முடிந்தது என எண்ணுகின்றோம்.ஆனால் அதுவும் மற்ற நோய்களைபோல  சாதாரணமானதுதான். கேன்சரைப்பற்றி சரியான விழிப்புணர்வு நமக்குஇல்லாததால் தான் அதற்கு முக்கியகாரணமாகும்.கேன்சர் வந்தவர்களுக்கு மனதைரியம்தான்முக்கியம். அடுத்து அவர்சார்ந்துள்ளவர்களுக்கு மன தைரியம் முக்கியம்.எந்த நிலையிலும் மனதைரியத்தை இழந்துவிடகூடாது. எனக்கு கிடைத்த இந்த 100 கேள்விகளும் அதற்கான விடைகளும் உங்களுக்கு கேன்சரைப்பற்றிய ஒரு தெளிவான மனநிலையை உருவாக்கும் என எண்ணுகின்றேன்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த பிடிஎப் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கேன்சரை பற்றிய கேள்விகளும் அதற்கான பதில்களும் முறையாக கொடுத்துள்ளார்கள்.
உங்களுடைய நண்பர்கள்.உறவினர்கள் யாருக்காவது கேன்சர் வந்திருந்தால் இந்த புத்தகத்தை அவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.

Wednesday, August 22, 2012

அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்


அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.

Monday, August 20, 2012

சிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள்

இன்றைய காலத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்ய வேண்டும்.
அதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரிசெய்துவிடலாம். இல்லையென்றால் லாப்ரோஸ்கோப்பி என்ற சிகிச்சையின் மூலமே நீக்க முடியும். மேலும் சிலருக்கு அந்த கற்களின் காரணமாக வயிற்றில் அடிக்கடி வலியானது ஏற்படும்.
அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதனை கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு அதனை ஈஸியாக வீட்டில் இருக்கும் ஒருசில உணவுகளை வைத்து கரைக்கலாம்.
தண்ணீர்: அனைவருக்குமே சிறுநீரகக்கல் போதிய தண்ணீரானது உடலில் இல்லாத காரணத்தினாலே வருகிறதென்று நன்கு தெரியும். ஆகவே எப்போது கற்கள் உடலில் இருக்கிறதென்று தெரிககிறதோ, அன்றிலிருந்து ஒரு நாளைக்கு 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுவே ஒரு சிறந்த எளிதான வழியாகும்.
வெந்தய தண்ணீர்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரகக்கற்கள் கரைவதோடு மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் டாக்ஸின்களும் வெளியேறுகின்றன.
டால் மிஸ்ரி: இது ஒரு புதுவிதமான படிகமாக்கப்பட்ட சர்க்கரை கட்டிகள். இந்த சர்க்கரைக் கட்டிகள் பனை மரத்திலிருந்து செய்யப்படுகிறது. இந்த பொருள் கிடைப்பது சற்று கடினம் தான்.
ஆனால் அதன் பலன் மிகவும் உயர்ந்தது. இது சிறுநீரகக்கற்களை கரைக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே அதனை இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை குடிக்க வேண்டும். முக்கியமாக அந்த கட்டிகள் தண்ணீரில் நன்கு கரைந்திருக்க வேண்டும்.
வாழைத்தண்டு: சமையலில் பயன்படும் வாழைத்தண்டுகளை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து உண்டால், சிறுநீரகக்கற்கள் வராமல் இருக்கும். அதுவே கற்கள் இருப்பவர்கள், அதனை தினமும் ஜூஸ் போட்டு குடித்தால், கற்கள் விரைவில் கரைந்துவிடும். ஏனெனில் அதில் அதிகமான அளவு நார்ச்சத்தானது இருக்கிறது. மேலும் அதில் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது.
கொத்தமல்லி இலைகள்: கொத்தமல்லி ஒரு சிறந்த மூலிகைப் செடி. இதில் பல வித நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த கொத்தமல்லியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
எனவே சிறுநீரகக்கற்களை நீண்ட நாட்கள் வைத்து, அதனால் அறுவை சிகிச்சை செய்யுமளவு கொண்டு செல்லாமல், வீட்டிலேயே தினமும் அதற்கான உணவுகளை சரியாக உண்டு வந்தாலே, கற்கள் கரைந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Friday, August 17, 2012

பார்வையற்றவர்களுக்கு செயற்கை விழித்திரை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை


மருத்துவ செய்தி
பார்வையற்றவர்களுக்கு செயற்கை விழித்திரை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

கண் பார்வையற்றவர்களுக்காக செயற்கை விழித்திரையை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையின்றி தவிக்கின்றனர். எனவே செயற்கையான முறையில் விழித்திரையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் கண் பார்வையற்ற எலிக்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன லென்சுடன் கூடிய விழித்திரை பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இதன் மூலம் பார்வை கிடைத்த எலி துள்ளிக் குதித்து விளையாட ஆரம்பித்தது. எனவே இதே தொழில்நுட்பத்தை மனிதர்களுக்கும் பயன்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் மனிதர்களிடம் இச்சோதனை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.