click me

Sunday, September 9, 2012

பிரிட்டன் மருத்துவத் துறையில் செல்வாக்குமிக்க 4 இந்திய டாக்டர்கள்

பிரிட்டன் மருத்துவத் துறையில் செல்வாக்குடன் திகழ்ந்து வரும் 50 பேர் கொண்ட பட்டியலை “பல்ஸ்” நாளிதழ் வெளியிட்டு வருகிறது.
நான்காவது ஆண்டாக, இந்நாளிதழ் நேற்று வெளியிட்ட பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நான்கு பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
கம்லேஷ் குந்தி, சாந்த் நாக்பால், கைலாஷ் சந்த், கிருஷ்ணா காசரனேனி ஆகிய இந்தியர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் கம்லேஷ் குந்தி லெஸெஸ்டர் நகரில் வசித்து வருகிறார். 1984ல், டுண்டீ பல்கலைக் கழகத்தில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர்.
நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில், நிபுணத்துவம் பெற்ற இவர், பிரிட்டனில் நீரிழிவு நோய்க்கான எண்ணற்ற விழிப்புணர்வு திட்டங்களில் ஆற்றிய பணிகள் எல்லாராலும் பாராட்டப்பட்டவை.
லண்டன் பல்கலைக்கழகத்தில் 1985ல் பட்டம் பெற்ற நாக்பால் ஹாரோ நகரில் வசிக்கிறார்.
1974ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற கைலாஷ் சந்த் தற்போது லங்காஷையர் நகரில் புகழ் பெற்ற டொக்டராக பணியாற்றி வருகிறார்.
கிருஷ்ணா, லெஸெஸ்டர் பல்கலைக் கழகத்தில் 2005ல் பட்டம் பெற்றவர்.

No comments:

Post a Comment