click me

Friday, September 7, 2012

சீனத்தொழிலாளர்களை பணிக்கு வைத்துக்கொள்வதை தவிருங்கள் : ஒபாமா

அமெரிக்காவில் சீனர்களின் பணி வாய்ப்புகளை தவிர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி பாரக் ஒபாமா தன் நாட்டு நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனநாயக தேசிய கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பாரக் ஒபாமா அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு கட்சி வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் ரோம்னி போட்டியிடுகின்றார்.
இந்நிலையில் தேர்தல் களத்தில் போட்டியிட உள்ள இவர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் சார்லோட் நகரில் பேசிய ஒபாமா கூறியதாவது, நாட்டின் கல்விமுறை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
அதே போல் அமெரிக்க நிறுவனங்கள், சீனத்தொழிலாளர்களை பணிக்கு வைத்துக்கொள்வதை தவிருங்கள் என்று கூறினார்.
இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் நட்புநாடுகள் என்று ஒபாமா கூறிவந்த நிலையில், சீனத் தொழிலாளர்கள் குறித்த ஒபாமாவின் இந்த கருத்து சர்வ‌தேச நாடுகளிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment