click me

Wednesday, September 5, 2012

தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்காஅத்துமீறி வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்: சீனா

தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என சீன ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பாக நான்கு ஆசிய நாடுகளுடன், சீனாவுக்கு பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இப்பிரச்னை குறித்து இந்தோனேஷியா நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் இப் பிராந்திய பிரச்னைக்கு அர்த்தமுள்ள விதத்தில் தீர்வு காண ஆசியான் நாடுகள் முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து இரண்டு நாள் பயணமாக சீனா வந்துள்ள ஹிலாரியிடம், ஈரான், சிரியா மற்றும் வடகொரியா நாடுகளின் பிரச்னை குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதன் பின் அவர் கிழக்கு திமோர் மற்றும் ப்ருனெய் நாடுகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்நிலையில் ஹிலாரியின் வருகையை சீனா ஊடகங்கள் விமர்சித்து எழுதியுள்ளன. அதில் இப்பிராந்திய பிரச்சினையில் அமெரிக்கா அத்துமீறி வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று விமர்சித்துள்ளன.
தென் சீனக்கடல் பிராந்தியத்தில் தாங்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. பன்னாட்டு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இப்பிராந்திய வளர்ச்சி மற்றும் அமைதிக்காக அமெரிக்கா செயல்படும் என்று ஹிலாரி கிளின்டன் முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment