click me

Friday, September 7, 2012

சீனாவின் யுன்னான் நிலநடுக்கத்தால் 64 பேர் பலி (வீடியோ இணைப்பு)

சீனாவின் யுன்னான், குயிசோவ் மற்றும் சிகுவான் மாகாணங்களில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 64 பேர் பலியாகியுள்ளனர், 715க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 11.19 மணிநேர அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகி இருந்தது.
யுன்னான் மாகாணத்தில் முதலில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் 5.6 ரிக்டர் அளவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சீன அரசின் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சீனாவின் எல்லையோர மாகாணங்களில் இன்று காலை முதல் மதியம் வரை மொத்தம்  16 முறை சிறு சிறு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலநடுக்கம் இலியாங் மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment