சீர்காழி, செப்., 11 : நாகை மாவட்டம் சீர்காழியில் மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜேந்திரன் (60) என்பவர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தார். அவர் நேற்று இரவு மேலையூரில் தனது கடையின் முன்பு நின்று கொண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், முத்துராஜேந்திரன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. குண்டுகள் வெடித்ததை அடுத்து ஒரே புகை மண்டலமாக அப்பகுதி மாறியது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், முத்துராஜேந்திரனை வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திமுக பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலையூர் பகுதியில் இன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் தடுக்க போலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment