2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கை வகுப்பதில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் எதிலும் கையெழுத்திடவில்லை எனவும் தமது மனுவில் கனிமொழி எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஏ.கே.பதக் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கனிமொழி சார்பில் பிரபல சட்டத்தரனி ராம்ஜெத்மலானி ஆஜராகிறார்.
2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கலைஞர் டிவியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment