பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 80 பேர் பலியாகி உள்ளனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கைபர், பக்துன்கவா மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் வெள்ளம் புகுந்ததில் 1,500க்கும் அதிகமான வீடுகள் நொறுங்கி விழுந்தன. இதில் இதுவரை 80 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சிந்து மாகாணத்தின் ஜகோபாபாத் நகரில் மட்டும் நேற்று 440 மி.மீ மழை பதிவானது. நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிந்து மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி செல்கின்றனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.





No comments:
Post a Comment