புது தில்லி, செப்.11: சுற்றுச் சூழல் விழிப்பு மற்றும் சுற்றுச் சூழல் காப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக, தில்லியில் இனி பிளாஸ்டிக் பைகள், பேப்பர்கள் ஆகியவற்றுக்கு தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தயாரிக்கப்படுவது, விற்பனை செய்யப்படுவது, தேக்கி வைப்பது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தில்லியில் தடை கொண்டுவர ஷீலா தீட்சித் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து, பிளாஸ்டிக் கவர்கள், பத்திரிகை உறைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படுகின்றன.
No comments:
Post a Comment