சென்னை வந்தார் பிரணாப் முகர்ஜி : முதல்வர் வரவேற்பு
சென்னை, செப்., 08 : சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புது தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில், பிரணாப் முகர்ஜியை, முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார். முதல்வருடன் தமிழக அமைச்சர்களும் உடன் இருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த குடியரசுத் தலைவருக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து தமிழக ஆளுநர் மாளிகை செல்லும் பிரணாப், மரியாதை நிமித்தமாக தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்திக்கிறார்.
No comments:
Post a Comment