click me

Thursday, September 6, 2012

பரங்கிப்பேட்டை: மூனா கல்வி நிறுவனத் தலைவர் அப்துல் ரஹ்மானுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைகழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது!

பரங்கிப்பேட்டை: மருத்துவம் மற்றும் கல்வித் துறையில் பல சேவைகளுக்காக டாக்டர் ரஹ்மான்ஸ் அறக்கட்டளை மற்றும் மூனா கல்வி நிறுவனத்தின் தலைவரான டாக்டர் அப்துல் ரஹ்மானுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைகழகத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது இன்று வழங்கப்பட்டது. சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜெயக்குமார் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதினை டாக்டர் அப்துல் ரஹ்மானுக்கு வழங்கினார்.  
தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற இவ்விழாவில் பல்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகணன், பல்கலைகழக இயக்குனர், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் முஹமது யுனுஸ் உள்ளிட்ட  பலர் கலந்துக் கொண்டனர்.
மேலும் பரங்கிப்பேட்டையிலிருந்து மூனா கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளான ஆடிட்டர் இலியா, ராஜ்குமார் ஆகியோரும் ஹபிபுர் ரஹ்மான், மீ.மெ. மீரா உசேன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்ச்சி குறித்த நேரத்திலும்  நேரவிரைய சமாச்சாரங்களும்  இன்றி கச்சிதமான முறையில் திட்டமிடுதலுடன் நடத்தப்பட்டதாக டாக்டர் ரஹ்மான்ஸ்  அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.  
நன்றி ;my pno

No comments:

Post a Comment