click me

Tuesday, September 4, 2012

எகிப்தில்;முக்காடு அணிந்து செய்தி வாசித்த பெண் அறிவிப்பாளர் (வீடியோ இணைப்பு)

எகிப்தில் முதன்முறையாக இஸ்லாமிய முறைப்படி பெண் அறிவிப்பாளர் முக்காடு அணிந்து செய்தி வாசித்தார்.
ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிச்காலத்தில் பெண் அறிவிப்பாளர்கள் முக்காடு அணிந்து செய்தி வாசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மக்கள் புரட்சிக்கு பின்னர் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்ததையடுத்து முக்காடு அணிவதற்கு இருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து பாத்திமா நபீல் என்ற பெண் அறிவிப்பாளர் எகிப்து அரசு தொலைக்காட்சியில் முக்காடு அணிந்து செய்தி வாசித்து புதுமைப்படுத்தினார்.
கடந்த 1960ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக முக்காடு அணிந்து செய்தி வாசிக்கும் பெண் பாத்திமா நபீல் ஆவார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஏனைய பெண் அறிவிப்பாளர்களும் தம்மைப் பார்த்து முக்காடு அணிவதை தொடர்வார்கள் என நம்பிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
எகிப்து இஸ்லாமிய நாடாக இருப்பினும் இத்தனை வருடங்களாக முக்காடு அணிந்து செய்தி வாசிப்பதற்கு தடை இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment