click me

Sunday, September 9, 2012

ஆர்டிக் பிரதேசம் : மைனஸ் டிகிரி குளிரிலும் உருகும் பனிப்பாறைகள்

பூமியின் வடகோடியில் உள்ள ஆர்டிக் பிரதேசம் முழுவதும் பனிப்பாறைகளால் ஆனது.
பூமியின் வெப்பநிலை சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் மைனஸ் டிகிரியில் குளிர் இருந்தும், இந்த வருடம் பனிப்பாறைகள் வெகு வேகமாக உருகி வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த இருபது வருடங்களில் இல்லாத வகையில், கடலில் மிதக்கும் இந்த பனிப்பாறைகள் உருகி மெலிந்து வருவது ஐரோப்பாவின் காலநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
உருகிய பனிப்பாறைகள் ஸ்வல்பர்ட் மற்றும் கிரீன்லாந்து வழியாக ஆர்டிக் பிரதேசத்தை விட்டு வெளியே செல்லும்போது அதை ஆராய உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்த ஒரு புரிந்துணர்வுக்கு நாம் வரவேண்டும் என்று நோர்வே ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் இப்பனிப்பாறைகள் மீது பட்டு மீண்டும் எதிரொளிப்பதால், அவை மீண்டும் மேலே ஆகாயத்திற்கு அனுப்பப்பட்டன.
ஆனால் பனிப்பாறைகள் உருகி இப்பிரதேசத்தை விட்டு விலகிச் செல்வதால், நேரடியாக வெப்பத்தை உறிஞ்சி மேலும் பிரச்சினையை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment