click me

Thursday, September 6, 2012

கோஸ்டா ரிகா நாட்டில் கடும் நிலநடுக்கம்: 2 பேர் பலி, 20 பேர் காயம்

கோஸ்டா ரிகா நாட்டில் நேற்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா நாட்டில் 7.6 ரிக்டர் அளவுகோலில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நில நடுக்கத்தால் இருவர் பலியானதாகவும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் சான் ஜோசுக்கு மேற்குப்பகுதியில் 87 மைல் தூரத்தில் இந் நிலநடுக்கம் மையமுற்றதையடுத்து, பசுபிக் கடல் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின் திரும்பப்பெறப்பட்டுள்ளது.இந்நிலநடுக்கத்தினால் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment