click me

Friday, September 7, 2012

பண்ருட்டியில் வீடு இடிந்து விழுந்து 5 பேர் உயிரோடு புதைந்தனர்: மயங்கிய நிலையில் மீட்பு

பண்ருட்டியில் இன்று காலை வீடு இடிந்து விழுந்து 5 பேர் உயிரோடு புதைந்தனர்: மயங்கிய நிலையில் மீட்புபண்ருட்டியில் சென்னை-கும்பகோணம் மெயின் ரோட்டில் சபாபதி செட்டியார் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு உள்ளது. இதில் சுந்தரம் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். வீடு மிகவும் பழுதாகி விட்டதால் பின் பகுதியை மட்டும் பயன்படுத்தி வந்தனர்.   

பண்ருட்டியில் கடந்த 10 நாட்களாக சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இன்று காலை சபாபதி வீட்டு அருகே பள்ளம் தோண்டி கால்வாய் அமைக்கும் பணி நடந்து வந்தது.


பண்ருட்டி அருகே உள்ள வெள்ளக்கரை, புதுப்பாளையம், ஒதியங்குப்பம், புதூர் பகுதிகளை சேர்ந்த 37 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். சபாபதி வீட்டை ஒட்டி அவர்கள் பள்ளம் தோண்டினார்கள். அப்போது எதிர்பாராத விதமாக சபாபதி வீட்டு சுவர் இடிந்து கீழே விழுந்தது. 10 அடி உயரம், 20 அடி நீளம் கொண்ட அந்த சுவர் இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த 5 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளை அப்புறப்படுத்தினார்கள். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு 5 தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் அவர்கள் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இருந்தனர். 

அவர்களை உடனடியாக பண்ருட்டி அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் விவரம்:- 1. ராஜமாணிக்கம் (வயது 50), 2. ராஜேந்திரன் (55) 3. மணி (50), 4. சேகர் (45) 5. லட்சுமணன் (37) அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

No comments:

Post a Comment