click me

Tuesday, September 11, 2012

சிறைச்சாலை: ஆப்கானிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் கடந்த 2001ஆம் ஆண்டு கைப்பற்றினர்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 3000 தலிபான்கள் ஆப்கான் நாட்டிலுள்ள பக்ராம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 2014ஆம் ஆண்டு நேட்டோ படையினர் ஆப்கானை விட்டு செல்ல உள்ளனர்.

அதன் பிறகு அமெரிக்காவினர் மட்டும் ஆப்கானில் இருக்கலாம் என்ற உடன்படிக்கையில் தலிபான் தீவிரவாதிகள் சண்டை நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்டனர்.
இதனடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சிறிய நிகழ்ச்சி ஒன்றில் அந்த சிறைச்சாலையை நிர்வகிக்கும் பொறுப்பை அமெரிக்கா ஆப்கான் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.
சிறைச்சாலையை நிர்வகிக்கும் பொறுப்பை அமெரிக்கா எங்களிடம் கொடுத்துள்ளதை வரவேற்கிறோம்.
இருப்பினும் ஆப்கானில் உள்ள அனைத்து கைதிகளையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஆப்கான் இறையாண்மைக்குரிய பிரச்சினை என்று ஆப்கான் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஆனால் யுத்தக் களத்தில் பிடிபட்டு சிறையில் உள்ள சில முக்கிய கைதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம் என்று அமெரிக்கா கூறி வருகிறது.
இங்குள்ள வெளிநாட்டு கைதிகள் 50க்கும் மேற்பட்டோரை ஒப்படைப்பது பற்றி ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.

No comments:

Post a Comment