click me

Friday, September 7, 2012

அகதிகள் படகு பாறையில் மோதி கவிழ்ந்தது துருக்கியில்: பலி எண்ணிக்கை 58ஆக உயர்வு

சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால், மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
துருக்கியில் மட்டும் சுமார் 80,000 பேர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் ஒரு மீன்பிடி படகில் சிரியா, ஈராக் நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டனர்.
அந்த படகு கடலில் பாறையில் மோதி கவிழ்ந்தது. இதில் 58 பேர் கடலில் மூழ்கி பலியாயினர் என்று துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment