click me

Sunday, September 9, 2012

எத்தியோப்பியா செல்லாதீர்கள்:சவூதி அரேபியா எச்சரிக்கை

எத்தியோப்பியாவில் உள்நாட்டுப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதனால் சவூதி அரேபியா தன் நாட்டு மக்களை அங்கு செல்லக்கூடாதென எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்காபிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள் நாட்டு பிரச்சினைகள் அதிகரித்த வருகின்றது.
அந்நாட்டு பொலிஸாரால் முஸ்லிம்கள் கைது செய்யப்படுதல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இக்கோரிக்கையை சவூதி விடுத்துள்ளது.
எத்தியோப்பிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டோரில் சவூதி நாட்டவர்களும் அடங்குகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது.
லெபனானில் உள்நாட்டுக் கலவரங்கள் நடைபெற்றபோது இவ்வாறான கோரிக்கை சவூதி அரசாங்கத்தால் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment