click me

Tuesday, September 11, 2012

பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரே அமெரிக்க டென்னிஸ் ஓப்பன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வென்றுள்ளார்.


நியுயோர்க்கில் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு திங்கட்கிழமை நடந்த இறுதிப் போட்டியில்,மர்ரே, செர்பியாவின் நோவாக் யாக்கோவிச்சை, மூன்று செட்களுக்கு இரண்டு என்ற கணக்கில் தோற்கடித்தார்.
சுமார் ஐந்து மணி நேரங்கள் நடந்த இந்தப் போட்டி, அமெரிக்க ஓப்பன் போட்டிகளில் மிக நீண்ட நேரம் நடந்த ஒரு சில போட்டிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டென்னிஸ் போட்டிகளில் "க்ராண்ட் ஸ்லாம்" என்று குறிப்பிடப்படும் மதிப்புமிக்க போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பனை பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் வீரர் ஒருவரும் வெல்லாத நிலையில், 76 ஆண்டுகளுக்குப் பின்னர் , அதை வெல்லும் முதல் பிரிட்டிஷ் வீரராகிறார் ஆண்டி மர்ரே.
இந்தப் போட்டியை வென்றதன் மூலம் மர்ரேக்கு, சுமார் இரண்டு மிலியன் டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கிறது.
கடைசியாக ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியை வென்ற பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர், பிரெட் பெர்ரி ஆவார். இவர் இந்தப் போட்டியை 1936ல் வென்றார்.

No comments:

Post a Comment