பங்குரா,செப்.7-

இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்பட்டது. தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு நேற்று 2 உடல்களை மீட்டனர். இன்று மேலும் 7 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
இதன்மூலம் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்தின் அடியில் எந்த உடலும் இல்லை. மேலும் பலர் உடல்கள் கிடைக்கலாம் என லால்கர் பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் காணாமல் போனவர்கள் பற்றி இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று பங்குரா மாவட்ட எஸ்.பி. முகேஷ் குமார் தெரிவித்தார்.
இந்த கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment