click me

Wednesday, September 5, 2012

தீவுகளை வாங்கும் முயற்சியில் ஜப்பான்: கடும் கோபத்தில் சீனா

கிழக்கு சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவுகள் சிலவற்றை அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ஜப்பான் விலைக்கு வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பானில் உள்ள சென்சாகு மற்றும் சீனாவில் உள்ள தாய்ஓயு என்ற இரண்டு தீவுகளையும் 2.05 பில்லியன் யென் கொடுத்து அரசு வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தீவுகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டோக்கியோ ஆளுநர் ஷிந்தாரோ இஷிஹரா பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி வருகிறார். இச்செயல் சீனாவிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கடந்த 3ஆம் திகதி மூன்று தீவுகளின் உரிமையாளரை சந்தித்து அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சியோதோ செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த மாதத்தின் நடுவில் அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்ததும், மாதக் கடைசியில் ஒப்பந்தம் போடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் சீனாவின் கம்யூனிசக் கட்சியின் பிரச்சார ஏடாகத் திகழும் நாளிதழ் ஒன்றில், ஜப்பான் இரட்டை வேடம் போடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் நல்லெண்ணத்துடன் இருப்பது போலவும், மறுபக்கம் வலதுசாரிகளைத் தூண்டிவிட்டு அரசு மற்றும் பொதுமக்களின் கருத்தை மாற்றியமைப்பதாகவும் ஜப்பான் செயல்படுகிறது என சீனா குற்றம் சாட்டியுள்ளது.

No comments:

Post a Comment