click me

Friday, September 7, 2012

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 3வது யூனிட் பார்லரில் திடீரென்று பழுது

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 3வது யூனிட் பார்லரில் திடீரென்று பழுது ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் உள்ளன. இதில் முதலாவது யூனிட்டில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் செப்.18ம் தேதி வரை மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கடந்த வாரம் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.100 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 

இதற்கிடையே மின்நிலையத்தில் 3வது யூனிட்டில் உள்ள பாய்லரில் நேற்றிரவு எதிர்பாராதவிதமாக பழுது ஏற்பட்டது. இதனால் 3வது யூனிட்டிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதலாவது யூனிட்டில் 210 மெகாவாட்டும், தற்போது மூன்றாவது யூனிட்டில் 210 மெகாவாட்டும் உற்பத்தி குறைந்துள்ளது. காற்றாலை மின்சாரமும் குறைந்த நிலையில் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 420 மெகாவாட் உற்பத்தி இழப்பால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment