இந்திய நிறுவனங்கள் பாகிஸ்தானில் முதலீடு செய்துகொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு மேம்படும் எனவும் ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய நிறுவனங்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இனி நேரடியாக முதலீடு செய்யலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்ய நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தற்போது 30 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு செய்யப்பட்டு வரும் இருதரப்பு வர்த்தகம், அடுத்த மூன்றாண்டுகளில் 60 கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதில் நிலவிவந்த பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment