வியட்நாம் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 29 பேர் பலியானார்கள்.
வியட்நாமில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது.
இதனால் வெள்ளத்தில் மக்கள் சிக்கியுள்ளனர். மலைப்பகுதிகள் மிக்க புறநகர் பகுதியில் இந்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 29 பேர் பலியாகினர்.
இதில் "யின்-பை" என்ற இடத்தில் மட்டும் 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சுரங்கப்பணியில் ஈடுபட்ட இவர்கள், மண்ணில் புதைந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மத்திய பகுதியில் இருக்கும் காபி தோட்டங்களும், நெல் பயிர் நிலங்களும் அதிக சேதமின்றி தப்பிவிட்டன.




No comments:
Post a Comment