click me

Thursday, September 6, 2012

சுனிதா வில்லியம்ஸ் பழுதான மின் இணைப்பை விண்வெளியில் மிதந்தவாறே சரி செய்தார்

சர்வதேச விண்வெளி நிலையத்தை பராமரிக்க விண்வெளியில் தங்கியுள்ள நாசா குழுவினர் பழுதடைந்த மின் இணைப்பை வெற்றிகரமாக சரி செய்தனர்.
6 பேர் கொண்ட இக்குழுவில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அகி ஹொஷிடே ஆகிய இருவரும் விண்வெளி ஓடத்திற்கு வெளியே வந்து அப்பணியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
கடந்த முறை 8 மணிநேரம் விண்வெளியில் மிதந்தவாறு செய்த பணிகள் வெற்றிகரமாக அமையவில்லை.
அதனால் இரண்டாவது முறையாக இப்போது 6.30 மணிநேரம் சுனிதா வில்லியம்ஸ் மற்று அகி ஹொஷிடே ஆகிய இருவரும் விண்வெளியில் மிதந்து நடந்து மெயின் பஸ் சுவிட்சை வெற்றிகரமாக நிறுவினர் என நாசா அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு பெக்கி வொயிட்சன் என்ற விஞ்ஞானிதான் அதிகபட்சமாக 39 மணிநேரம் 46 நிமிடங்கள் விண்ணில் நடந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
இந்திய வம்சா வழியை சேர்ந்த ஒரு பெண்ணான சுனிதா வில்லியம்ஸ் ஆறு முறை விண்ணில் நடந்து அதிக பட்சமாக 44 மணிநேரம் 2 நிமிடங்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அவரை மிஞ்சியுள்ளார் என்று நாசா அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment