click me

Wednesday, September 12, 2012

பரங்கிப்பேட்டை:இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் கூட்டம்!

பரங்கிப்பேட்டை: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரங்கிப்பேட்டை ஜாமிஆ அப்பாபள்ளியில் நடைப் பெற்றது. இக்கூட்டத்திற்கு இந்தியத் தவ்ஹீத் ஜமாஅத்  மாநிலத் தலைவர் S.M. பாக்கர், துணைத் தலைவர்  முனீர், மாநிலப் பொருளாளர்  தொண்டியப்பா ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய கு. நிஜாமுத்தீன், ஒத்த கருத்துகொண்ட கொள்கைவாதிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள சிதைவு – பிரிவினை குறித்து பேசியதில், சத்தியத்தை நிலைநிறுத்த கட்டமைப்புடன் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
தொண்டியப்பா பேசுகையில், “வளர்ந்து சமூகத்தை சூழ்ந்து நிற்கும் தொழிற்நுட்ப சாதனங்கள், சமூக வலைத்தளங்களால் ஏற்படும் கடும் கெடுதிகளை எடுத்துக்காட்டி  எச்சரிக்கையாக இருக்க வேண்டியதின் அவசியத்தை கூறினார்.சிறப்புரையர்றிய  S.M.  பாக்கர், லா இலாஹா இல்லல்லாஹ் எனும் ஓரிறைக் கொள்ளை குறித்த செய்தியை நம்மை சுற்றி வாழும் தொப்புள் கொடி உறவுகளுக்கு எடுத்து சொல்லவேண்டியதன் அவசியத்தையும், சமுதாய பெண்கள் விழிப்புணர்வுடன்  இருக்க வேண்டிய அவசியத்தையும் பற்றி எடுத்துரைத்தார்.

பிறகு கடலூர் மாவட்ட செயலாளர் ஹமீது கவுஸ் இல்லத்தில் நடந்த சந்திப்பில் புதிய நகர நிர்வாகிகள் அறிமுகப்படுத்தட்டனர்.
புதிய நிர்வாகிகள் விபரம்:
தலைவர்: எஹயா மரைக்காயர்
து. தலைவர்: சாய மரைக்காயர்
செயலாளர்: ஷேக் அப்துல் காதர் (சேட்டு)
து. செயலாளர்: ஜாஃபர் அலி
பொருளாளர்: ஜெய்னுல் ஆபிதீன் மாலிமார்

நன்றி; mypno

No comments:

Post a Comment