click me

Wednesday, September 5, 2012

கொழும்பு திரும்பினர் இலங்கை யாத்ரிகர்கள்

வேளாங்கன்னி மற்றும் பூண்டி மாதா ஆலயங்களுக்கு சுற்றுலா வந்த இலங்கை யாத்ரிகர்கள் 184 பேர் கொழும்பு திரும்பி சென்றனர்.
இம்மாதம் 15ம் திகதி வரை தமிழகத்தில் பிரதான சுற்றுலா ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இவர்கள் மீது மதிமுக உட்பட சில அரசியல் கட்சிகள் தாக்குதல் நடத்தியதையடுத்தே தொடர் எதிர்ப்பு காரணமாக நேற்றே நாடு திரும்பினர்.
இவர்களில் 83 பெண்கள், 36 குழந்தைகள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை கொழும்பு அழைத்து செல்வதற்காக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் திருச்சி வந்தது.
இந்த விமானத்தின் மூலம் இவர்கள் கொழும்பு சென்றனர்.
இதையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment