click me

Friday, September 7, 2012

கோஸ்டாரிகாவில் நிலநடுக்கம் 2 பேர் பலியாகினர்.


சான்ஜோஸ்: மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி இரவு ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சான் ஜோஸில் இருந்த சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகள், அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு சாலைகளில் குவிந்தனர். நிலநடுக்கத்தின் அதிர்ச்சி மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment